சென்னைப் பெருநகருக்கான புதிய நகர்ப்புற செயல்திட்டத்தை நோக்கி...

Towards a New Urban Agenda for Chennai Metropolitan Area


Download E-Book


படிக்க.


1
Step

அறிமுகம்

சென்னைப் பெருவெள்ளம்… என்ன நடந்தது?

2
Step

செயல்திட்டம்

நாம் விரும்பும் சென்னை – இலக்கு என்ன?

3
Step

பங்கேற்க

பிரச்சார இயக்கத்தில் இணையுங்கள்…

4
Step

பகிர்க

அறிமுகம்.

சென்னைப் பெருவெள்ளம்… என்ன நடந்தது?

சென்னை செயற்கை பேரழிவும் படிப்பினைகளும்


சென்னையில் சராசரி அளவை விட கூடுதலாக பெய்த பெருமழையை தடுத்திருக்க முடியாது. ஆனால், அதனால் ஏற்பட்ட சென்னைப் பேரழிவை தமிழக அரசால் பெருமளவு தடுத்திருக்க முடியும்.

சென்னை வெள்ளப் பேரழிவுக்கு தமிழ்நாடு அரசாங்கத்தின் அலட்சியமும், செயல்படாத தன்மையுமே உடனடிக் காரணம்.

சென்னை வெள்ளப் பேரழிவுக்கான காரணங்கள் ஒரே நாளில் உருவானவை இல்லை. இழப்புகளை பன்மடங்காக அதிகரிப்பதற்கு கடந்து நாற்பது ஆண்டுகளில் தமிழக அரசாங்கம் செய்த தொடர்ச்சியான தவறுகளே காரணம்.

காலநிலை மாற்றத்தால் இனிவரும் காலங்களில் இயற்கை சீற்ற பாதிப்புகள் மென்மேலும் அதிகரிக்கும். தொலைநோக்குப் பார்வை இல்லாத அரசாங்கத்தால் அதனை எதிர்கொள்ள முடியாது.

சென்னை நகரம் காலநிலை மாற்றத்தின் பேராபத்துகளை எதிர்கொண்டு சமாளிப்பது சாத்தியம்தான். சென்னை ஒரு நீடித்திருக்கும் நகரமாக மாறுவது நடைமுறையில் சாத்தியமே. சென்னை மக்களால் அந்த சாதனையை படைக்க முடியும்.

இப்போதைய தமிழக அரசாங்கம் தானாக செயல்பட வாய்ப்பு இல்லை. அழாத பிள்ளைக்கு பால் கிடைக்காது. சென்னை மக்கள்தான் அரசாங்கத்தை செயல்பட வைக்க வேண்டும்.

செயல்திட்டம்.

நாம் விரும்பும் சென்னை – இலக்கு என்ன?

ஒருங்கிணைந்த வெள்ள இடர் மேலாண்மை

சென்னை தூயநீர் நகரம்

குப்பையில்லா சென்னை

சென்னை தூயக் காற்று நகரம்

சென்னையில் நீடித்திருக்கும் போக்குவரத்து

சென்னையில் சாலைப் பாதுகாப்பு

சென்னை பசுமை நகரம்

சென்னை நலமான நகரம்

சென்னை அனவருக்குமான நகரம்

காலநிலை பாதுகாப்பிற்கான சென்னை

சென்னை மாநகர நல் ஆளுகை

சென்னை செழிப்பான நகரம்

சென்னை கலாச்சார நகரம்

ஒருங்கிணைந்த வெள்ள இடர் மேலாண்மை

Integrated Flood Risk Management – சென்னைப் பெருவெள்ளம் ஒரு பாடமாக அமைய வேண்டும். இனியும் இயற்கைச் சீற்றங்கள், செயற்கைப் பேரழிவாக மாறக்கூடாது. வெள்ளம், புயல், வறட்சி இடர்களில் இருந்து சென்னை பெருநகரை மீட்க வேண்டும். எப்படி?

சென்னை தூயநீர் நகரம்

Clean Water Chennai – இந்திய நகரங்களில் மிகக் குறைவாக குடிநீர் கிடைக்கும் சென்னை நகரில் – அனைவருக்கும் தூய்மையான குடிநீர், துப்புரவு வசதிகளை உறுதி செய்ய வேண்டும்; கழிவுநீரை முழுமையாக சுத்தீகரிக்கவும் வேண்டும். ஏன்?

குப்பையில்லா சென்னை

Zero Waste Chennai – இந்தியாவிலேயே மிக அதிக குப்பையை உருவாக்கும் நகரம் சென்னை. குப்பையை உருவாக்காத, குப்பையே இல்லாத நகராக மாற வேண்டும். எப்படி?

சென்னை தூயக் காற்று நகரம்

Clean Air Chennai – இந்தியாவில் மிகவும் மோசமாக காற்று மாசுபட்ட நகரம் சென்னை. ஆண்டுக்கு 4000 பேர் மரணத்துக்கு காற்று மாசு காரணம். இதை மாற்றுவது எவ்வாறு?

சென்னையில் நீடித்திருக்கும் போக்குவரத்து

Sustainable Transport in Chennai – சென்னை நகரின் மிக முக்கியமான சிக்கல் போக்குவரத்து நெரிசல். காலதாமதம், காற்றுமாசு, சாலைவிபத்து, பொருளாதார இழப்பு, மன உளைச்சலுக்கு காரணமாகிறது நெரிசல். இதனை இல்லாமல் செய்வது எப்படி?

சென்னையில் சாலைப் பாதுகாப்பு

Safe Roads Chennai – உலகிலேயே அதிக சாலைவிபத்துகள் நடக்கும் நாடு இந்தியா. இந்தியாவில் மிக அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநகரம் சென்னை. இந்த பேராபத்தை தடுப்பது எப்படி?

சென்னை பசுமை நகரம்

Chennai Green City – பசுமைப் பகுதிகள், பூங்காக்கள், பொதுவெளிகள் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை அளிக்கின்றன. ஆனால், சென்னை நகரில் மரங்களும் பசுமைப் பகுதிகளும் வேகமாக அழிக்கப்படுகின்றன. இந்த கேட்டினை தடுப்பது எப்படி?

சென்னை நலமான நகரம்

Chennai Healthy City – மிக அதிகமானோர் உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ள நகரம் சென்னை. நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ள நகரம் இது. நீரிழிவு நோய் தலைநகரமாக இருப்பது சென்னைதான். அதிகரித்துவரும் ‘வாழ்க்கைமுறை’ (Lifestyle Disease) நோய்களை தடுப்பது எப்படி?

சென்னை அனவருக்குமான நகரம்

Chennai Inclusive City – வாழிடம் என்பது ஒரு அடிப்படை உரிமை. குடிசைப்பகுதிகள் மேம்படுத்தப்பட வேண்டுமே தவிர, சென்னைக்கு வெளியே அப்புறப்படுத்தப்படக் கூடாது. நகரில் வாழும் உரிமை (Right to the City) காப்பாற்றப்பட வேண்டும். எதற்காக?

காலநிலை பாதுகாப்பிற்கான சென்னை

Chennai for Climate Protection – பூமி வெப்பமடைவதால் மிகவும் பாதிக்கப்படும் நகரங்களில் சென்னையும் ஒன்று. மாசுக்காற்றை வெளியிட்டு பூமி வெப்பமடையக் காரணமாகும் நகரங்களிலும் சென்னை ஒன்று. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நகரமாக சென்னை நகரை மாற்றுவது எப்படி?

சென்னை மாநகர நல் ஆளுகை

Good Local Governance in Chennai – சென்னையில் ஜனநாயகம் இல்லை. மக்கள் பங்கேற்புடன் இங்கு அரசாங்கம் நடக்கவில்லை. ஊழல் மலிந்தும், ஒருங்கிணைப்பு இல்லாமலும், சீரழிந்துள்ள சென்னை மாற்றப்பட வேண்டும். எப்படி?

சென்னை செழிப்பான நகரம்

Chennai Productive City – சென்னை பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். சென்னை மக்கள் எல்லோரும் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும். உள்ளூர் உணவகங்களில் சாப்பிட வேண்டும் (Eat Local, Buy Local). எதற்காக?

சென்னை கலாச்சார நகரம்

Chennai Cultural City – சென்னை பண்பாடும் கலாச்சார வளமும் மிகுந்த நகரம். மிகப் பெருமை வாய்ந்த வரலாறுகளைக் கொண்ட நகரம். சென்னை நகரின் கலை, கலாச்சாரம், வரலாறு போற்றப்பட வேண்டும். ஏன்?

பங்கேற்க.

Fields marked with an * are required

நாம் விரும்பும் சென்னை’ – பிரச்சார இயக்கத்தில் இணையுங்கள்

சென்னைப் பெருவெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள் சென்னை பெருநகருக்கு ஒரு படிப்பினையாக மாற வேண்டும். கடந்த கால தவறுகளை திருத்தி, இனிவரும் காலத்தை வளமாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நியாயமான, நீதியான, அனைவருக்கும் நன்மை அளிக்கும் நீடித்திருக்கும் நகரமாக சென்னை மாற இதுவே தக்க தருணம்.

‘நாம் விரும்பும் சென்னை’ பிரச்சாரத்தின் செயல்திட்டங்கள் அனைத்தும் நடைமுறைச் சாத்தியமானவையே. உலகின் பல நகரங்கள் இத்திட்டங்களை செயலாக்கியுள்ளன. உலகின் மற்ற நகரங்களால் சாதிக்க முடியும் என்றால், அது சென்னையிலும் சாத்தியமே.

இப்போதைய தமிழக அரசாங்கம் தானாக செயல்பட வாய்ப்பு இல்லை. அழாத பிள்ளைக்கு பால் கிடைக்காது. சென்னை மக்கள்தான் அரசாங்கத்தை செயல்பட வைக்க வேண்டும்.

‘நாம் விரும்பும் சென்னை’ பிரச்சார இயக்கத்தில் – தனிநபராக, சமூக அமைப்பாக, குடியிருப்போர் சங்கமாக, தனியார் நிறுவனமாக – உங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள். நமது மாநகரம். நாமே மாற்றிக்காட்டுவோம்.

Watch Video

chennaifloods1

பகிர்க.

ஆலோசனை கூறுங்கள் (Suggestions)

சென்னைப் பெருநகருக்கான புதிய நகர்ப்புற செயல்திட்டம் குறித்த உங்களது ஆலோசனைகளை இங்கே அளிக்கவும்


தொடர்பு.